கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே பொற்றையடியைச் சேர்ந்த இளம்பெண்ணின் வாழ்க்கை இரண்டாவது திருமணத்திலும் தோல்வியடைந்து, நடு இரவில் அதிரடி முடிவு எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் திருமணத்தில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்த அந்தப் பெண்ணுக்கு, பெற்றோர் வற்புறுத்தி பத்துகாணி பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால், திருமணமான சில நாட்களிலேயே கணவர் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியாதவர் என்பதை அறிந்து, வேதனையடைந்த பெண், நடு இரவில் வீட்டை விட்டு வெளியேறினார். ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் நடந்து சென்றவர், காரில் லிப்ட் கேட்டு பேணு பகுதிக்கு சென்றார்.
காரில் இறங்கிய இளம்பெண்ணை கணவரின் உறவினர்கள் கடத்தப்பட்டதாக நினைத்து காரைத் தாக்க முயன்றனர். ஆனால், பெண் தானாகவே வீட்டை விட்டு வெளியேறியதாகவும், யாரும் தன்னைக் கடத்தவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
இதையடுத்து, ஆறுகாணி காவல் நிலையத்தில் பொதுமக்கள் அவரை ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், இளம்பெண் தனது இரண்டாவது கணவர் திருமண வாழ்க்கைக்கு தகுதியற்றவர் எனக் கூறி, பெற்றோருடன் செல்வதாக தெரிவித்தார்.
பெற்றோரையும், கணவர் வீட்டாரையும் வரவழைத்து விசாரித்த போலீசார், பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பொற்றையடி, பத்துகாணி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.