சென்னையில் கடந்த 21 நாட்களில் 29,000 நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராத்தி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி, தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுப்பில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும் அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.
தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை கடந்த 9ம் தேதி மேயர் பிரியா தொடங்கி வைத்த நிலையில், முதற்கட்டமாக மணலி, மாதவரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி கடந்த மாதம் 9ம் தேதி முதல் நேற்று செப்டம்பர் 2ம் தேதி வரை 21 நாட்களில் 29,748 தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?