ஹிந்தி திரையுலகில் 'பாட்ஷா' எனப்படும் 'கிங் கான்' நடிகர் ஷாருக்கான். இவர் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளை கொண்டவர். இவர் அடுத்ததாக 'தி கிங்' படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தில் மகள் 'சுஹானா கான்' கூட நடித்துக் கொண்டிருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாய நில ஒப்பந்தம் தொடர்பான காவல் புகாரில் 'சுஹானா கான்' பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி,இச்செய்தி ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த புகாரனது அலிபாக்கில் ரூ.22 கோடி மதிப்புள்ள 2 நிலங்களை விவசாயத்திற்காக வாங்கி, சொகுசு பண்ணை இல்லம் கட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஷாருக்கான் மகன் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம், குடும்பத்தைச் சுற்றிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.