அமெரிக்காவில் பெண் நோயாளிகளை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த டாக்டருக்கு 24 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் தனியார் ஆஸ்பத்திரியில் ஜி ஆலன் செங் என்பவர் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரது வீட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சையின்போது அவருக்கு மயக்க மருந்துகொடுத்து டாக்டர் பலாத்காரம் செய்தார். இதையடுத்து அந்த பெண் தனது வீட்டின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது தன்னை டாக்டர் ஆலன் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் ஆலனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாரணையில் மேலும் 7 பெண் நோயாளிகளை இதேபோல் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆலனுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. மேலும் மருத்துவ பணியை தொடரவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.