தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு டிஜிபியாக , காவல்துறை நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், மற்றும் அதபோல் தமிழக போலீஸ் வீட்டு வசதி துறை டிஜிபியாக இருந்த சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் கடந்த ஆக.29-வெள்ளிக்கிழமை பணி ஓய்வு பெற்றனர். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அன்றைய தினம் மாலை 4 மணியளவில் இருவருக்கும் வழியனுப்பு விழா நடைபெறவுள்ளது. அத்துடன் ஏற்கனவே ஓய்வுபெற்றுவிட்ட டெல்லி காவல் ஆணையரும், தமிழக காவல்துறையை சேர்ந்தவருமான சஞ்சய் அரோரா, காவல்துறை ஐ.ஜி.ஆசியம்மாள் மற்றும் இன்று ஓய்வுபெறும் டிஜிபிக்கள் ஆகிய நால்வருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் விரைவில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரம் தமிழகத்தின் அடுத்ததாக சட்டம் ஒழுங்கு டிஜிபியா யார் நியமிக்கப்படுவார்கள் என்கிற அறிவிப்பு வெளியாகாமலேயே இருந்தது. அத்துடன் புதிய டிஜிபியாக தற்போது யாரும் நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், மாறாக பொறுப்பு டிஜிபியாக நிர்வாக பிரிவு டிஜிபி வெங்கட்ராமனை அரசு நியமிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படியே, தமிழ்நாட்டின் காவல்துறை நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமனுக்கு கூடுதலாக டிஜிபி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.