இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதில், சிலர் ரவுடிகள் போல, ஆரவாரமாக கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். இந்தக் காட்சியை அவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். ஆனால், இந்த வீடியோவைப் பார்த்த காவல்துறையினர், ஒழுங்கு நடவடிக்கையாக வீடியோவில் இருந்தவர்களை கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் ஒழுக்கம் தொடர்பான திருக்குறள் கூற வைத்து அதை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.