தமிழ்நாட்டின் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான தேர்வுப் பட்டியல் தற்போது tngasa.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தேர்வாகிய விரிவுரையாளர்கள் வரும் செப்டம்பர் 8ஆம் தேதிக்குள் தங்களுக்குரிய அரசு கல்லூரிகளில் பணியில் இணைந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பணியில் காலதாமதம் இல்லாமல் சேர்வதன் மூலம் மாணவர்களின் கல்வி பாதிப்பு தவிர்க்கப்படும் எனவும் அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.