அதுக்கெல்லாம் பயந்து இந்த வீடியோவை நான் போடல. நானும் ஒரு மனுஷிதான். எனக்கும் குடும்பம் இருக்குன்னு பொரிந்து தள்ளி இருக்கிறார் நடிகை அம்மு ராமச்சந்திரன். இவர் டிவி சீரியல் நடிகை. மரியாதை படத்தில் விஜயகாந்தின் மகளாக நடித்தவர். இவர் சமீபத்தில் கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் தெரு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய பேச்சு சமூகவலை தளங்களில் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. டிரோலில் வசமாக சிக்கியுள்ளார்.
அந்த வீடியோவில் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசுறவங்க பட்டியல்ல ஒண்ணுமே தெரியாதவங்களைக் கூப்பிட்டு உட்கார வச்சிருக்காங்க. தெரு நாய்களே வேணாம்கற பட்டியல்ல இருக்குறவங்க நிறைய விஷயம் தெரிஞ்சவங்க. இது 8 மணி நேரம் நடந்த புரோகிராம். அதை வெறும் 45 நிமிஷத்துக்குள்ள எடிட் பண்ணிருக்காங்க.
அங்க பேசுனதை இங்கே இங்கே பேசுனதை அங்கன்னு வெட்டி ஒட்டிருக்காங்க. டிஆர்பிக்காக. கோபிநாத் எதுக்காக இப்படி செஞ்சாங்கன்னு தெரியல. தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசுற போது அந்த வாயில்லா ஜீவன்களான நாய்களும் வேணும். நமக்கும் பாதுகாப்பு வேணும்னு பேசிருக்கலாம். ஆனா எங்களை எல்லாம் பேச விடாம, அவங்களையே பேச விட்டுட்டாங்க என்று குமுறுகிறார் அம்மு.
இதை நெட்டிசன்கள் என்ன சொல்றாங்கன்னு பாருங்க. நீயா, நானா ஒரு தப்பு பண்ணிட்டாங்க. நாய்களுக்கு ஆதரவா பேசுறவங்களை மட்டும் அந்த ரூம்ல தனியா இருக்க விட்டு ஒரு பத்து வெறி புடிச்ச தெருநாய்களைக் கொண்டு வந்து ரூமுக்குள்ள விட்டுடுங்க. அப்புறம் தெரியும் அவங்களுக்கு அந்த வலி அனுபவிச்சாத் தான் அதோட வலி அவங்களுக்குப் புரியும் என்கிறார் ஒரு நெட்டிசன்.
இன்னொருவர் இவ்வளவு பேசுறீயே… உன் தெருவில இருக்குற நாயைக் கூட்டிட்டுப் போய் வளர் பார்க்கலாம் என்கிறார். இன்னொருவர் இன்னும் ஒரு படி மேல் போய் நானும் தான் நாய் வளர்க்கிறேன் நாயே. கட்டிப்போட்டு வளர்க்கிறேன் நாயே. பெத்த புள்ளைய கடிச்சதுன்னா நாய் இல்ல மனுசனா இருந்தா கூட கொன்னுடுவான். உனக்கு அது தெரியுதா இல்லையான்னு தெரியல என்கிறார் ஒரு நெட்டிசன்.