BAD GIRL: 'பெண்கள் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் அல்ல, அது பெண்களின் வேலையுமல்ல' - வர்ஷா பரத்
Vikatan September 02, 2025 09:48 AM

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'Bad Girl'.

அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் நடைபெற்றது.

`BAD GIRL' படம்

இதில் பேசிய வர்ஷா பரத், " நம் ஊரில் மண்ணையும் பெண்ணையும் காப்பாற்றுவோம் என சொல்பவர்கள்தான், இந்தப் படத்தை தயாரித்தவர், டிரெய்லரை வெளியிட்டவர், இந்தப் படத்திற்கு ஆதரவாக இருப்பவர்கள்.

அதிலிருந்தே அவர்களின் அரசியல் என்ன, மனநிலை என்ன என புரிந்து கொள்ளலாம்.

நாங்கள் கலாசாரத்தை சீரழிக்கிறோம் என குற்றம் சாட்டுகிறார்கள். கலாசாரம்தான் பெண்களை காப்பாற்ற வேண்டும், பெண்கள் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் அல்ல. அது பெண்களின் வேலையும் அல்ல" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.