வீட்டு முகவரி போல கூகுள் (Google) அக்கவுண்ட் நமக்கு மிகவும் முக்கியமானது. ஜிமெயில் தொடங்கி, கூகுள் போட்டோஸ், ஜிபே, கூகுள் டிரைவ் என அனைத்தையும் ஜிமெயில் (Gmail) ஐடி மூலமாக தான் நாம் பயன்படுத்துகிறோம். அதனால் அதனை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்துவது மிகவும் முக்கியம். நாம் போகிற போக்கில் வேறு கம்ப்யூட்டரில் நமது கூகுள் அக்கவுண்ட்டை பயன்படுத்திய பிறகு லாக் அவுட் செய்ய மறந்துவிடலாம். இது தவறாக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் நம் தனிப்பட்ட தகவல்களை பிறர் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனை தவிர்க்க நம் கூகுள் அக்கவுண்ட்டை வேறு யாரும் பயன்படுத்துகிறார்களா என தெரிந்துகொள்வது அவசியம்.
இதனை தெரிந்துகொள்ள கூகுள் ஒரு எளிய வசதிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் சில நிமிடங்களில் உங்கள் கூகுள் கணக்கில் வேறு என்ன டிவைஸ்களில் லாகின் செய்யப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கலாம்.
எப்படி தெரிந்துகொள்வது?உங்கள் கம்ப்யூட்டரில் google.com/devices என்ற இணையதளத்துக்கு செல்லுங்கள். அங்கு உங்கள் கூகுள் கணக்கு பயன்பாட்டில் இருக்கும் அனைத்து டிவைஸ்களும் காட்டப்படும். அதில் இருந்து உங்களுக்கு வேண்டாத டிவைஸ்களை அன்லாக் செய்யலாம்.
இதையும் படிக்க : கூகுள் டிரான்ஸ்லேட்டில் இனி புது மொழியே கற்கலாம்.. வந்தது அசத்தல் ஏஐ அம்சம்!
இதனை மேனுவல் முறையிலும் சரி பார்க்கலாம். அதற்கு கீழ்காணும் முறையில் பின்பற்றுவதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இதில் உங்கள் கூகுள் அக்கவுண்ட் லாகின் செய்திருக்கும் அனைத்து டிவைஸ்களும் மொபைல், லேப்டாப், டேப்லெட் என அனைத்தும் தெரியும். தெரியாத டிவைஸ்கள் இருந்தால் அதனை கிளிக் செய்து Sign Out கொடுக்கலாம்.
இதையும் படிக்க : யுபிஐயில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? திரும்ப பெறுவது எப்படி?
மொபைல் மூலம் தெரிந்துகொள்வது எப்படி?உங்களுக்கு தெரியாத டிவைஸ்களில் உங்கள் கூகுள் அக்கவுண்ட் லாகின் செய்யப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக Sign Out செய்யவும். பின்னர் கூகுள் கணக்கின் படி பாஸ்வேர்டை உடனடியாக மாற்றவும்.
மூன்றாம் தரப்பு செயலிகளால் ஆபத்துஉங்கள் கூகுள் கணக்குடன் இணைந்திருக்கும் மூன்றாம் தரப்பு செயலிகள் கூட பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம். நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத செயலிகள் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருக்கலாம். எனவே பயன்படுத்தாத செயலிகளை தவறாமல் அடிக்கடி நீக்க வேண்டும்.