இந்த 10 விஷயங்களை சாட்ஜிபியிடம் ஷேர் பண்ணாதீங்க – காத்திருக்கும் ஆபத்து
TV9 Tamil News September 04, 2025 08:48 AM

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையிலான சாட்பாட்கள் இன்று நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. மின்னஞ்சல் எழுதுவதில் இருந்து நம் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பது வரை அவற்றை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். சாட்ஜிபிடி (Chatgpt),  ஜெமினி போன்ற ஏஐ சாட்பாட்கள் நம் வேலைகளை எளிமையாக்கி வருகின்றன. இந்த நிலையில் சிலர் அதனை நண்பர்களாக நினைத்து தங்களை பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த நிலையில் சாட்ஜிபிடியில் தேவையற்ற தகவல்களைப் பகிர்வது ஆபத்தானது. இந்த தகவல்கள் சேமிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படலாம்.

சில நேரங்களில் நாம் சாட்ஜிபிடியுடன் பகிரும் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படலாம் அல்லது சில நேரங்களில் பிரைவசி பாதிப்பு, மோசடி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்த தகவல்களை சாட்ஜிபிடியுடன் பகிரக் கூடாது என தெரிந்துகொள்வது அவசியம். இந்த நிலையில் சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்பாட்களுடன் பகிர கூடாத 10 விஷயங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இதையும் படிக்க : எதிர்காலத்தை முற்றிலுமாக மாற்றப்போகும் 5 கேட்ஜெட்டுகள்.. என்ன என்ன தெரியுமா?

சாட்ஜிபிடியிடம் கேட்க கூடாத 10 விஷயங்கள் 1.பாஸ்வேர்டுகள்

உங்கள் வங்கி, இமெயில், அல்லது சமூக வலைதள கணக்குகளின் பாஸ்வேர்டுகளை ஒரு போதும் சாட்ஜிபியிடம் பகிர வேண்டாம். இவை வெளியானால் நேரடியாக மோசடியில் சிக்கலாம். நிபுணர்கள் பாதுகாப்பான பாஸ்வேர்டு மேனேஜர் பயன்பாட்டை பயன்படுத்துகிறார்கள்.

2. நிதி தொடர்பான விவரங்கள்

வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற தகவல்களை பகிர்வது ஆபத்தானது. இப்படிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படலாம்.

3. சென்சிட்டிவ் படங்கள் மற்றும் டாக்குமென்ட்கள்

பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்ற டாக்குமென்ட்களை பகிர வேண்டாம். அதே போல உங்கள் தனிப்பட்ட புகைப்படங்கள் போன்றவற்றை சாட்ஜிபிடியிடம் பகிர வேண்டாம்.

4. வேலை தொடர்பான தகவல்கள்

அலுவலகம் சார்ந்த டாக்குமென்ட்கள், பொருளாதாரம் சம்பந்தமான பொருட்கள் சாட்ஜிபிடியுடன் பகிராதீர்கள். இவை உங்கள் நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

5. சட்டம் தொடர்பான தகவல்கள்

ஒப்பந்தங்கள், வழக்குகள் அல்லது சட்ட சிக்கல்கள் பற்றிய தகவல்களை சாட்ஜிபிடியிடம் பகிராதீர்கள். சட்ட ஆலோசனைக்காக எப்போதும் வழக்கறிஞரை மட்டுமே அணுகுவது நல்லது.

இதையும் படிக்க : சாட்ஜிபிடியில் இனி டீனேஜர்களுக்கு வரும் பெற்றோரின் கட்டுப்பாடு.. ஓபன் ஏஐ முக்கிய முடிவு!

6. உடல்நலம் தொடர்பான தகவல்கள்

மருத்துவ அறிக்கைகள், மருந்து விவரங்கள் ஆகியவற்றை சாட்ஜிபிடியிடம் பகிராதீர்கள்.  காரணம் சில நேரங்களில் சாட்ஜிபிடி அளிக்கும் தகவல்களால் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம்.

7. தனிப்பட்ட தகவல்கள்

முழுப் பெயர், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் ஆகியவற்றை பகிர்வதை தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் இதனால் மோசடிக்கு ஆளாகலாம்.

8. ரகசியங்கள்

உங்கள் தனிப்பட்ட ரகசியங்களை சாட்பாட்டுக்கு சொல்ல வேண்டாம். அவை வேறு இடங்களில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

9. தவறான கண்டென்ட்கள்

மோசமான, சட்டவிரோதமான அல்லது தடைசெய்யப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை பகிர்வதை தவிர்க்க வேண்டும். அவை கண்காணிக்கப்படலாம்.

10. பொதுவாக பகிர விரும்பாத விஷயங்கள்

பொதுவாக சமூக வலைதளங்களில் வெளியிட விரும்பாத தகவல்களை சாட்ஜிபிடியுடன் பகிர வேண்டாம். அவை சில நேரங்களில் பொது வெளியில் பகிரப்படலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.