சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வருகை தந்திருந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். இருவரும் ஒரே காரில் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலானது. இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக கிரெம்லின் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சந்திப்பின் போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து ஊடகங்களில் பலவேறு கற்பனைகள் எழுந்தன. இந்நிலையில் சீன பயணத்தை முடித்த பிறகு, ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், காரில் மோடியுடன் நடந்த உரையாடலைப் பற்றி விளக்கம் அளித்தார். “அந்த உரையாடலில் எந்த ரகசியமும் இல்லை. டொனால்டு டிரம்புடன் நான் அலாஸ்காவில் நடத்திய உரையாடல் பற்றித்தான் பிரதமர் மோடியிடம் விளக்கினேன்,” என புதின் கூறினார். இந்தத் தகவலால், மோடி–புதின் சந்திப்பு மீதான பரபரப்பு ஓரளவுக்கு தெளிவுபெற்றுள்ளது.