ரூ13106 கோடி முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்... முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் !
Dinamaalai September 05, 2025 08:48 PM


 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக  இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் மூலம்  ரூ.13,016 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளார். இந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தில் 17,813 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி தொழில் மற்றும் ஆராய்ச்சி மையமாக மாற்றுவதற்கு இந்தப் பயணம் முக்கிய பங்காற்றியுள்ளது.


அதன்படி  இந்துஜா குழுமம், மின்சார வாகனங்கள், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்திக்காக ரூ.5,000 கோடி  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தத் திட்டம் 1,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.  .

அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், சென்னையில் அதன் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை  ரூ.176 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்ய உள்ளது.  இதன் மூலம் இந்த விரிவாக்கம், மருந்து ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டின் முக்கியத்துவத்தை உயர்த்தும். இந்த முதலீடுகள் மூலம்  சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.