தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் அனைத்திற்கும் விடுமுறை. இன்று உத்தரவை மீறி சட்ட விரோதமாகவோ அல்லது கள்ளச் சந்தையிலோ மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பேக்கரி கடையில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் அதிரடியாக சோதனை நடத்தியதில் அது உண்மை என தெரியவந்துள்ளதோடு அங்கிருந்த மொத்தம் 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மதுபானங்களை விற்பனை செய்த சேனாதிபதி (42) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதிமுக கட்சியின் வர்த்தக அணி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வழக்கில் அதிமுக கட்சியின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது