சென்னையில் இரவு 11.30 மணியளவில் திடீரென பெய்த கனமழை..! மீண்டும் மேகவெடிப்பா..?
Top Tamil News September 06, 2025 12:48 AM

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால், இரவு 11 மணி முதல் 12 மணி வரை ஒரு மணிநேரத்தில் 10 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்தது.

குறைந்த நேரத்தில் மேகங்கள் அதிகமாக குவிந்து, குளிர்ச்சியால் அடர்த்தியான மழை மேகமாக மாறுகின்றன. அந்த மேகங்கள் திடீரென சீறிப் பொழியும்போது, ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழை சில நிமிடங்களில் கொட்டித் தீர்ந்துவிடுகிறது. இந்த அதீத மழைதான் "மேகவெடிப்பு" என்று அழைக்கப்படுகிறது.

சென்னையில் இதற்கு முன்பு 1943, 2015, 2021 ஆகிய ஆண்டுகளிலும் மழை வெடிப்பு அல்லது மேகவெடிப்பு நிகழ்வுகள் நடந்துள்ளனசென்னைக்கு நேரடியாக வடகிழக்கு பருவமழை காற்றழுத்தங்கள் மற்றும் புயல்கள் உருவாகும் மண்டலம் என்பதாலும் சென்னையில் மேகவெடிப்பு நிகழ்வதற்கான காரணம் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் மேகவெடிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அதனை தொடர்ந்து நேற்று இரவு திடீரென மழை பெய்தது. புறநகர் சென்னையில் இரவு 11.30 மணியளவில் திடீரென கனமழை பெய்திருக்கிறது.

கோயம்பேடு, அண்ணாநகர், பாடி, வில்லிவாக்கம், அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்திருக்கிறது.

சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று அதிகாலை வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிறங்க வேண்டிய விமானங்கள் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமிட்டு பறந்து கொண்டு இருந்தன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.