தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை மேலும் கூறியதாவது:
நடிகர் விஜய்க்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் 2026 தேர்தலில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது வேறு; ஆட்சியமைப்பது என்பது வேறு.
தமிழ்நாடு எப்போதும் புதிய தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் மாநிலம். பொதுவாக, 10% வாக்காளர்கள் மாற்றத்தை விரும்பி வாக்களிப்பார்கள். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள விஜய்யால், அந்த 10% வாக்குகளை தன்வசம் ஈர்க்க முடியும். இதன் மூலம், அவர் கண்டிப்பாக தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்.
அண்ணாமலையின் இந்தக் கருத்து, விஜய்யின் அரசியல் நுழைவு, தமிழகத்தின் எதிர்கால அரசியல் களத்தை மாற்றியமைக்கும் என்ற எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது.
Edited by Mahendran