ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மதராஸி’. இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில், டிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இப்படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஏ.ஆர்.முருகதாஸ் சார், படக்குழுவினர் மற்றும் என் அன்பான ராக்ஸ்டார் அனிருத் ஆகியோருடன் கடந்த ஒன்றரை வருடங்கள் எனக்கு ஒரு அற்புதமான பயணம் இருந்தது. இந்த அதிரடி பொழுதுபோக்கு படத்தை உங்களுக்கு வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்.
நீங்கள் அனைவரும் எங்கள் வேலையை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து இதை திரையரங்குகளில் பாருங்கள்." என்று பதிவிட்டுள்ளார்.