முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் 10 நாட்களுக்குள் இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செங்கோட்டையன் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைக்க EPS-க்கு செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார்.
2026 தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலில் சந்தித்தால்தான் வெற்றி பெற முடியும் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருதுவதாகவும் கூறியுள்ளார். 10 நாள்களுக்குள் நல்ல முடிவை எடுக்காவிட்டால் ஒத்த கருத்துடைய தலைவர்களை ஒன்றிணைத்து, ஒருங்கிணைப்பு பணியை செய்யத் தொடங்குவோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்நிலையில், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் கூறியதை வரவேற்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பிரிந்துள்ள அனைவரும் இணைந்து, அதிமுக கூடுதல் வலிமை பெற வேண்டும் என்பதே தனது கருத்தும் கூட என பதிவிட்டுள்ளார். சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இணைக்க வேண்டும் என அடுத்தடுத்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?