“தனித்து நிற்கும் தைரியம் திமுகவிற்கு உள்ளதா?”- எ.வ.வேலுவுக்கு அன்புமணி பதிலடி
Top Tamil News September 05, 2025 08:48 PM

பாமக நிறுவனர் ராமதாஸ் விதித்த கெடுவுக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணியிடம் கேட்டபோது மௌனம் சாதித்தார். 


சென்னை செல்வதற்காக சேலம் விமான நிலையத்திற்கு வந்த அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமைச்சர் எ.வ.வேலு பாமக தனித்து நிற்க திராணி உள்ளதா? என்று பேசியிருந்தார். அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி, திமுக தனித்து நின்றால், பாமக நிச்சயமாக தனித்து நிற்கும் என தெரிவித்தார். நாங்கள் ஏற்கனவே  கூட்டணி இல்லாமல் தனியாக தேர்தலில் பலமுறை நின்று இருக்கிறோம். இதே தைரியம் திமுகவிற்கும் எ.வ.வேலுவிற்கும் உள்ளதா என்று கேட்டு சொல்லுங்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

இதனை அடுத்து காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டார். ராமதாஸ் விதித்த கெடு தொடர்பாக செய்தியாளர்கள் சேலம் மற்றும் தர்மபுரியில் தொடர்ந்து அன்புமணியை சந்தித்தபோது, நேற்றிலிருந்து  தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.