இந்தியாவில் வாழும் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு (Aadhaar Card) கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டில் ஏற்படும் பிழைகள், சிக்கல்களை சரிசெய்துக்கொள்ள பொதுமக்கள் ஒவ்வொரு முறையும் இ சேவை மையங்கள் அல்லது இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தான் ஆதார் சேவைகளை எளிமையாக்கும் வகையில் மத்திய அரசு செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் செய்து முடித்துவிட முடியும். இந்த நிலையில், ஆதர் சேவைகளை எளிதாக பெறும் வகையில் அரசு அறிமுகம் செய்துள்ள செயலி குறித்து விரிவாக பார்க்கலாம்.
இ ஆதார் செயலி என்றால் என்ன?இ ஆதார் செயலி என்பது ஆதார் சேவைகளை ஸ்மார்ட்போனில் பெற உதவும் ஒரு செயலி ஆகும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள எம் ஆதார் (m Aadhaar) செயலியை போலவே தான் இந்த இ ஆதார் (e Aadhaar) செயலியும் ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவமாக செயல்படும். அதன்படி, இந்த இ ஆதார் செயலி மூலம் பொதுமக்கள் தங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை மிக சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். அது தவிர தேவையான நேரங்களில் இந்த செயலியின் மூலமே ஆதார் கார்டை டிஜிட்டல் அட்டை முறையில் பகிர்ந்துக்கொள்ளவும் முடியும்.
இதையும் படிங்க : போன் பே, கூகுள் பே-க்கு போட்டியாக களமிறங்கும் பிஎஸ்என்எல்.. யுபிஐ சேவையை தொடங்க திட்டம்!
இ ஆதார் செயலியின் முக்கிய அம்சங்கள் என்ன?இதையும் படிங்க :ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல் – டிக்கெட் புக் செய்யும் முறையில் புதிய மாற்றம்
இந்த செயலி ஆரம்ப கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த செயலியில் பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்து உள்நுழைந்து ஒருசில சேவைகளை பெற்றுக்கொள்ள தற்போது அனுமதி வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் இந்த செயலி முழுவதுமாக தயார் செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. கண் ரேகை, கை ரேகை பதிவை இணைப்பது தவிர மற்ற அனைத்து சேவைகளையும் இந்த செயலி மூலமே பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.