'கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனுக்கு பாஜக தலைமை மீது அதிருப்தி இல்லை'; அவரிடம் பேசியதாக அண்ணாமலை தகவல்..!
Seithipunal Tamil September 05, 2025 08:48 PM

அதிமுக கூட்டணியில் இருந்து  டிடிவி தினகரன் விலகுவதை அறிவித்தார். இது தமிழக அரசியல் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது: 

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனிடம் தொலைபேசி வாயிலாக அவர் பேசியதாகவும்,  தினகரன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், அவர் மீண்டும் கட்சியில் இணைவார் என நம்புவதாக கூறியுள்ளார்.

அத்துடன், பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தங்களது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், கூட்டணியில் இருக்கும் சிறு சிறு பிரச்சினைகள் களையும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், கூட்டணியில் பிரச்சினைக்குரியவர்கள் இருக்கிறார்கள். கட்சி மேலிடம் மீது எனக்கு அதிருப்தி இல்லை. அமித்ஷாவிடம் தொலைபேசியில் பேசினேன் என்று டிடிவி தினகரன் கூறியதாக அண்ணாமலை செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.