இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறிய தங்கம் விலை.. இன்னும் சில நாட்களில் ஒரு கிராம் ரூ.10000..!
Webdunia Tamil September 05, 2025 07:48 PM

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று மட்டும் சற்று குறைந்திருந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ₹70 உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ₹560 அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் தொடர்ந்தால், ஒரு சில நாட்களில் ஒரு கிராம் தங்கம் ₹10,000 என்ற விலையை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை உயர்ந்தாலும், இன்று வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ₹1,000 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய தங்கம், வெள்ளி விலை குறித்த தகவகள் இதோ:

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,795

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 9,865

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 78,360

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 78,920

சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,685

சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,761

சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 85,480

சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 86,088

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.136.00

சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.136,000.00

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.