5ம் தேதி பத்திரிகையாளர்கள் அனைவரையும் சந்திக்கிறேன். அந்த சந்திப்பு கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “வரும்5ம் தேதி பத்திரிகையாளர்கள் அனைவரையும் சந்திக்கிறேன். அந்த சந்திப்பு கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் நடைபெறும். திருமண மண்டபத்தில் இல்லை. 5ம் தேதி காலை 9 மணிக்கு அந்த கூட்டம் நடைபெறுகிறது. கட்சியில் இருந்து வேறு யாரையும் வர வேண்டாம் என கூறிவிட்டேன். அன்றைய தினம் என்னுடைய கருத்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கருத்தை பிரதிபலிக்கப்போறேன். நான் இதுவரை வேறு யாரையும் சந்திக்கவில்லை. இன்று மட்டும் 32 திருமணங்கள் இருக்கிறது. திருமணங்களுக்கு சென்று கொண்டிருக்கிறேன். சசிகலாவை அடிக்கடி சந்தித்து பேசியதாக வெளியான தகவல் உண்மையில்லை. அதிமுக தொண்டர்களின் கருத்தை பிரதிபலிக்கவே செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன்” என்றார்.
எடப்பாடி தரப்பில் இருந்து யாராவது பேசினார்களா என்ற கேள்விக்கு 5ம் தேதி சொல்கிறேன் என்றார்.5ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் வருவார்கள் என்பது எனக்கு தெரியாது. நேற்று கூட யாருக்கும் தகவல் தெரிவிக்காத நிலையில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு உள்ளனர் என்றார்