ஜெர்மனி, லண்டனில் குவிந்த ரூ.15,516 கோடி முதலீடு.. 17,613 பேருக்கு வேலை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
TV9 Tamil News September 06, 2025 08:48 PM

சென்னை, செப்டம்பர் 06 : தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி, லண்டன் பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்ப்டடுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவில் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலீட்டாளர்கள், முதலீட்டாளர் சந்திப்பு என முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது ஜெர்மனி, லண்டன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார். முதற்கட்டமாக ஜெர்மனி சென்றார். இவருடன் தலைமை செயலர், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோரும் சென்றனர்.

ஜெர்மனி சென்ற அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கு பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, 2025 செப்டம்பர் 1ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டன் சென்றார். தொடர்ந்து, அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும், ஆகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். மேலும், அங்கு பல்வேறு முதலீட்டாளர்களை அவர் சந்தித்தார்.

Also Read : பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் – ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை..

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Electrifying news from #London!

UK-based Hinduja Group will invest Rs. 7,500 Cr in TN’s EV ecosystem, for battery storage systems — creating 1,000+ jobs.

With AstraZeneca’s expansion and earlier MoUs, the UK & Germany leg of #TNRising has secured Rs. 15,516 Cr investments,… pic.twitter.com/AprScf5XMs

— M.K.Stalin (@mkstalin)

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து,  முதலீட்டளார்களை  சந்தித்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.  லண்டன், ஜெர்மனி பயணத்தில்  ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்ப்டடுள்ளதாக  முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இந்துஜா குழுமம், தமிழ்நாட்டின் மின்சார வாகனச் சூழலமைப்பில், பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்காக ரூ. 7,500 கோடியை முதலீடு செய்யும். இதன் மூலம் 1000க்கும் மேற்பட்டோருக் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

Also Read : முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம்.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடிதம்!

முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி சுற்றுப் பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இது நமது இளைஞர்களுக்கு 17,613 வேலைகளை உருவாக்குகிறது. இவை வெறும் எண்கள் அல்ல. அவை வாய்ப்புகள், இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் கனவுகள். இது தான் திராவிட மாடலின் உத்வேகம்” என பதிவிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.