ரெயில் பயணம் இனி எளிது..! மதுரை–பெங்களூரு வந்தே பாரத்தில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு..!
Seithipunal Tamil September 06, 2025 11:48 PM

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, மதுரை–பெங்களூரு வந்தே பாரத் ரெயிலில் வருகிற 11-ந்தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இதனால், மதுரையிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து மதுரைக்குமான வந்தே பாரத் ரெயிலில் (வண்டி எண் 20671/20672) 11-ந்தேதி முதல் 8 கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

அதேபோல், மங்களூர் சென்ட்ரல்–திருவனந்தபுரம் வந்தே பாரத் ரெயிலில் (வண்டி எண் 20631/20632) 9-ந்தேதி முதல் 4 கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.