தமிழகத்தில் தஞ்சாவூர் உள்பட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதே இதற்குக் காரணம்.
செப்டம்பர் 6 அன்று வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
செப்டம்பர் 7 அன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 8 அன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 9 அன்று கோயம்புத்தூர் மலைப்பகுதி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 10 அன்று சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை குறித்து, இன்று (செப். 6) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.