பாட்னாவில் அபூர்வ சம்பவம்; நோயாளியின் கண்ணில் வளர்ந்த பல் - மருத்துவர்கள் கூறுவதென்ன?
Vikatan September 07, 2025 09:48 AM

பாட்னா இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம் (IGIMS) மருத்துவர்கள் சமீபத்தில் ஒரு அபூர்வமான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். பிகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான நபரின் வலது கண்ணுக்குள் பல் வளர்ந்திருந்தது.

கடந்த மார்ச் மாதத்தில், அவரின் வலது கண்ணின் கீழ் பகுதியில் கட்டி போன்ற புண் உருவாகியிருக்கிறது.

இதனால் பார்வை மங்கல், தலைவலி, தலைச்சுற்றல் போன்ற சிரமங்கள் ஏற்பட்டன. முதலில் உள்ளூர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற அவர், பின்னர் பாட்னா IGIMS மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை

அங்கு செய்யப்பட்ட சிபிசிடி (Cone Beam Computed Tomography) ஸ்கேன் மூலம் அவரது கண்ணின் கீழ் பகுதியில் பல் வேர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் முகத்தில் வீக்கம் ஏற்பட்டு, மேலுள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அபூர்வ சம்பவம் குறித்து IGIMSயின் டாக்டர் நிம்மி சிங், “முகம் வளரும்போது பல் உருவாக்கும் தன்மை திசை மாற்றம் அடைந்து, கண் அருகே வளர்ந்திருக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம், மருத்துவ அறிவியலில் மிகவும் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது.

”ராஜ நாகம் என்பது ஓர் இனம் அல்ல..” - விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்த ஆச்சரிய தகவல்கள் என்ன?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.