சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் பணிபுரிந்து வந்த டாக்டர். சங்குமணி, ஓய்வு பெற்றா. இதனையடுத்து திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியின் தலைவராக பணியாற்றி வந்த டாக்டர். ஆர்.சுகந்திராஜகுமாரி, பதவி உயர்வு மூலம், சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்.சுகந்திராஜகுமாரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடக்கு சூரன்குடி கிராமத்தில் வசித்து வருபவர் . இவர் நாகர்கோயிலில் உள்ள உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்த திருநெல்வேலியில் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தார்.சென்னை மருத்துவக் கல்லூரியில் தோல் மருத்துவத்தில் முதுகலைப்பட்டம் பெற்று பல்கலை அளவில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்றவர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துக் கல்லூரியில் பேராசிரியராகவும், தலைமை இயக்குநராகவும், பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் தலைவராகவும் பணியாற்றினார். அங்கே கூடுதல் இயக்குநராகவும் பணிபுரிந்தவர். தற்போது சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?