பள்ளிக்கல்வித்துறை சார்பில், டெட் (Teacher Eligibility Test) தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் முன்பே தீர்ப்பு வழங்கியிருந்தது. இதன் அடிப்படையில், தற்போது மாநிலம் முழுவதும் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலை குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
தகவலின்படி, மொத்தம் 1,76,000 ஆசிரியர்கள் இதுவரை டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இவர்களின் நிலையை சீராய்ந்து, டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம், பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.