திருநெல்வேலி மாவட்டத்தில், கராத்தே மாஸ்டர் ஒருவர், தன்னிடம் கராத்தே கற்றுக் கொள்ள பயிற்சிக்கு வரும் மாணவர்களின் தாயாரை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்துள்ள நிலையில், இது குறித்த புகாரின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த நரசிங்க நல்லூர் பொன்விழா நகரை சேர்ந்தவர் அப்துல் வகாப் (37) கராத்தேவில் டிப்ளமோ முடித்துள்ள இவர், டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் கராத்தே வகுப்புகளை நடத்தி வருகிறார். அதே போன்று பாளை கே.டி.சி நகர் பகுதியிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.
இந்த 2 பயிற்சி வகுப்புகளிலும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்துல் வகாப்பின் மையத்திற்கு சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் 13 வயது மகள், கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். தினமும் காலையில் சிறுமியை அவரது தாயார் பயிற்சி மையத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளார். அப்போது அப்துல் வகாப் அந்த பெண்ணிடம் செல்போன் எண்ணை பெற்ற அப்துல் வகாப் அதன் பின்னர் அந்த பெண்ணிடம் நைசாக பேசி ஆசை வார்த்தை கூறி அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாக பழகி, உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது குறித்து அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் சமீப காலமாக அந்த பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பெண்ணின் வீட்டுக்கு சென்ற அப்துல் வகாப்., போன் செய்த போது எதற்காக எடுக்கவில்லை என்று கூறி அவரை தாக்கியதோடு, தான் அழைக்கும் போது தன்னுடன் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளார். இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனால் அப்துல் வகாப் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
உடனடியாக அந்த பெண் சுத்தமல்லி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் அப்துல் வகாம் தினமும் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவ-மாணவிகளின் தாயாரை நோட்டமிட்டு அதில் சில பெண்களிடம் நைசாக பேசி அவர்களது செல்போன் எண்களை வாங்கிக் கொண்டு அவர்களிடம் பேச்சு கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர்களை ஆசை வார்த்தை கூறி மயக்கி தனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
அவரது மன்மத லீலையின் வலையில் சுமார் 8க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்து இருப்பதும் சில பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையை இழந்திருப்பது தெரிய வந்தது. மேலும் இதனை வெளியே தெரிவித்தால் தங்களுக்கு அவமானம், வெளியில் நடமாட முடியாது என்று கருதி அந்த பெண்கள் எதையும் வெளியே சொல்லாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கரேத்தே மாஸ்டரின் இந்த மோசமான நடவடிக்கைகளை அறிந்தே அவரிடம் இருந்து விலகியதாகவும், அதனால் தான் அப்துல் வகாப் வீட்டிற்கு சென்று பிரச்சினை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சுத்தமல்லி போலீசார் நேற்றிரவு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அப்துல் வகாபை கைது செய்தனர். அவரால் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்கள் தைரியமாக புகார் அளித்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?