தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் முதல் படம் யதார்த்த கதையுடன் எண்டர்டெயின் படமாக இருக்கம். அதன் பிறகு வெளிவந்த அனைத்து படங்களும் இடதுசாரி அரசியல் மக்கள் நலம் சார்ந்த அரசியல் என சமூக கருத்துக்களுடன் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களை இயக்க ஆரம்பித்தார்.
ஒரு இயக்குனராக சமூக நலம் சார்ந்த படங்களை எடுப்பது மட்டுமில்லாமல் ”கிராஸ் ரூட்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ’மனுஷி’ மற்றும் ’பேட் கேர்ள்’ என்ற இரு படங்களை தயாரித்துள்ளார். மக்களுக்கு தேவையான அற்புதப் படைப்பை வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். கண்டிப்பாக இது ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் சென்சார் போர்டில் ஆரம்பித்து நீதிமன்றம் வரை படம் இழுத்து அடிக்கப்பட்டதால் வெற்றிமாறன் ஒரு வழியாகிவிட்டார்.
இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகி இனி நான் படங்களை தயாரிக்கப் போவதில்லை பேட் கேர்ள் உடன் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மூடுகிறேன் என்று சமீபத்தில் மிகவும் மன வருத்தத்துடன் அறிவித்தார். இந்நிலையில் இதைப் பற்றி சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிக்கையாளருமான வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில்,” வெற்றிமாறனுக்கு சென்சார் போர்டில் அதிக பிரச்சனை வருவது உண்மைதான். அவரை ஒரு இயக்குனராக பார்க்காமல் வெற்றிமாறனாக பார்க்கிறார்கள்”.
”அதனால் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். விடுதலை பாகம் ஒன்று படத்தை ஒரு படமாக எடுத்தார். அதுவே விடுதலை பாகம் 2 மக்களுக்கு தேவையான பாடமாக எடுத்துள்ளார். இதனால் தான் இவருக்கு இவ்வளவு நெருக்கடி வருகிறது. சென்சார் போர்டில் யார் மிகவும் கெடுபுடியாக இருப்பார்களோ அவர்களை கூட்டி வந்து விடுவார்கள். வெற்றிமாறன் படம் வரும் பொழுது பிஜேபியில் இருந்து நான்கு பேர் வந்து உட்கார்ந்து விடுவார்கள்”.
”அப்புறம் படத்தை பார்க்க வைத்து அதை ஒரு பெரிய விமர்சனம் ஆக்குவார்கள். மற்ற யாருக்கும் இப்படி நடப்பதில்லை வெற்றிமாறன் படங்களுக்கு மட்டும் சில ஸ்பெஷல் ஆட்களை வர வைப்பார்கள். அவர்கள் பார்த்துவிட்டு மதிப்பெண்கள் வழங்குவார்கள். அவர்களும் அதில் குறைகளை அடுக்குவார்கள். இங்கு சென்சார் போர்டு ஆட்களை தேர்ந்தெடுப்பதிலேயே பிரச்சினை இருக்கிறது”.
”அரசியல் சார்ந்த நபர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது எப்படி தரமான படங்களை கொடுக்க முடியும். அவர்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அதை அனுமதிக்க மாட்டார்கள். அதனால் இங்கு யாரை சென்சார் போர்டில் உட்கார வைக்க வேண்டும் என்ற மரியாதையே போச்சு இதனால் இப்படி பல சிக்கல்கள் இருக்கிறது. இந்த ஜனநாயக நாட்டில் இதை களைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு”. என்று கூறியிருக்கிறார்.