டெல்லி, செப்டம்பர் 10 : உலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day) 2025 செப்டம்பர் 10ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது. தற்கொலைகளை தடுக்கும் வகையில், அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, தற்கொலை எண்ணத்தில் இருந்து எப்படி மீள்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம். மேலும், இந்த தினம் எப்படி உருவானது என்பது குறித்தும் தெரிந்து கொள்வோம். உலகம் முழுவதும் தற்கொலை சம்பவங்கள் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. அவர்களில் பெரும்பாலோர் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். நம் நாட்டில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று NCRB அறிக்கை கூறுகிறது.
அதே நேரத்தில், உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. தேர்வில் தோல்வி, குடும்ப பிரச்னை, நிதி ரீதியான பிரச்னை, காதல் விவகாரம் பல்வேறு காரணங்களால் பலர் தற்கொலை என்ற தவறனா முடிவை எடுத்து வருகின்றனர். எனவே, தற்கொலையை தடுக்கும் வகையிலும், தற்கொலை எண்ணத்தில் இருந்து மீள்வது குறித்தும் உலக நாடுகள் சுகாதார அமைப்புடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மனநல ஆலோசனை, கலந்தாய்வு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தற்கொலை எண்ணங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Also Read : காதலனுடன் ஹோட்டலில் இருந்த பெண்.. இறுதியில் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி
உலக தற்கொலை தடுப்பு தினம்#WorldSuicidePreventionDay | Changing silence into support!
This World Suicide Prevention Day, let’s change the narrative on suicide by fostering openness, understanding, and hope.
Start the conversation — it could save a life.
Need help or know someone who does? Call… pic.twitter.com/e71oziNv73
— Ministry of Health (@MoHFW_INDIA)
அந்த வகையில் தான், 2003 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 10ஆம் தேதியான இன்று தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான (2025) கருப்புபொருள் ‘தற்கொலை பற்றிய கதையை மாற்றுதல்’ என்பதாகும்.
Also Read : சினிமாவுக்கு ஆழைத்து செல்லாத கணவர்.. விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட 23 வயது இளம்பெண்..
அறிகுறிகள்தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிப்பதில்லை என்னும் சில அறிகுறிகள் மூலம் கண்டறிய முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அதாவது,வாழவே பிடிக்கவில்லை, சுய வெறுப்பு, எனக்கென்று யாரும் இல்லை, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து தள்ளி இருப்பது, மன நோய்கள், தனிமையை விரும்புவது, உயிர் எழுதி வைப்பது, தற்கொலை செய்து கொள்வதற்கான வழிகளை தேடுவது, எதிர்காலம் இல்லை என சொல்வது போன்ற அறிகுறிகளாம் என WHO பட்டியலிடுகிறது.
விடுபடுவது எப்படி?மன உளைச்சல், மனச்சோர்வு, தற்கொலை எண்ணம் போன்றவை இருந்தால், உங்கள் நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள். மேலும், உங்கள் எண்ணத்தை மாற்ற, உங்களுக்கு பிடித்தவற்றை செய்யலாம். மேலும், ஒவ்வொரு வயதுக்கு ஏற்க உதவிகளை நாடலாம். சிலருக்கும் கவுன்சிலிங் தேவைப்படலாம். இதற்காக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள பல செயல்படுகின்றன. எனவே, தற்கொலை எண்ணம் இருப்பவர்கள் கவுன்சிலிங் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, தற்கொலை பற்றிய விழிப்புணர்வை, உங்கள் சமூக வட்டத்தில் ஏற்படுத்த நீங்களும் முயற்சி மேற்கொள்ளுங்கள். தவறான முடிவை எடுக்கும் பலருக்கும் உங்களுடைய ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்கு சரியான வழிகாட்டுதலும் மிக முக்கியம். தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பது குறிப்பிடத்தக்கது.