விஜயகாந்தின் சகோதரி விஜயலட்சுமி காலமானார்.. இன்று இறுதிச் சடங்கு..!
Top Tamil News September 10, 2025 09:48 PM

கேப்டன் விஜயகாந்த்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார்.அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இன்று வரை அங்கு ஆயிரக்கணக்கானோர் தினமும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் மதுரையைச் சேர்ந்தவர்.

அவரது சகோதரி விஜயலட்சுமி சென்னையில் வசித்து வந்தார். மேலும், அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ நிபுணராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்தைப் போலவே ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. மருத்துவத் துறையில் அவரது சேவையைப் பாராட்டும் வகையில் பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் 78 வயதான விஜயலட்சுமி நேற்று சென்னையில் காலமானார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் விஜயலட்சுமி இயற்கை எய்தியதாகவும், அவரது உடல்  இன்று மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது.

விஜயகாந்தின் சகோதரி விஜயலட்சுமியின் மரணத்திற்கு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.