குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.இராதாகிருஷ்ணன் புதிய உயரங்களைத் தொட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரின் வாழ்த்து செய்தியில், "இந்தியாவின் 15-ஆம் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரு.சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்கள் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றிருப்பது மக்கள் பிரதிநிதிகள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்றாவது குடியரசுத் துணைத் தலைவரான திரு.சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்கள், தமது சிறப்பான பணியின் மூலம் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறேன். அரசியலமைப்புச் சட்டப் பதவிகளில் அவர் புதிய உயரங்களைத் தொடுவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.