உங்களுக்கெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதோ அதே மகிழ்ச்சி தான் எனக்கும் உள்ளது என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இளையராஜாவின் பொன்விழா ஆண்டையொட்டி, சென்னை நெரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பாராட்டு விழாவில் இளையராஜவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் அரங்கேற்றப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள பாராட்டு விழா குறித்து ‘இசைஞானி’ இளையராஜா பெருமிதம் கூறியுள்ளார். இதுதொடர்பாக இளையராஜா கூறுகையில், “ஒரு கலைஞருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்துவது இதுவே முதல் முறை. உங்களுக்கெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதோ அதே மகிழ்ச்சி தான் எனக்கும் உள்ளது.மக்கள் எல்லாரும் இந்த நிகழ்ச்சி வந்து கலந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அரங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவில் தான் கலந்து கொள்ள முடியும். மக்கள் அவ்வளவு எதிர்பார்ப்பில் உள்ளனர்” என்றார்.