சிங்கம் vs முதலை…. இறைக்காக நீருக்குள் நடந்த அதிரடி தாக்குதல்… கடைசியில் சிங்கம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
SeithiSolai Tamil September 10, 2025 05:48 PM

காடு என்பது எப்போதும் ஆபத்தும், அதிர்ச்சியும் நிரம்பிய இடமாக உள்ளது. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, “சிங்கமா? முதலையா? யார் ஜெயிப்பார்கள்?” என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறது. இந்த வீடியோவில், நீரின் நடுவே நடக்கும் ஒரு அதிர்ச்சிகரமான சண்டையை காணலாம். நீருக்குள் கிடந்த இறையை உண்பதற்காக சிங்கம் வந்தது. அப்போது அங்கு இருந்த முதலை பாய்ந்து கொண்டு சிங்கத்தை தாக்க முயன்றது. இதனால் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது.

 

 

View this post on Instagram

 

A post shared by The Big Cats Empire (@thebigcatsempire)

பொதுவாக, நீரில் இருக்கும் முதலையை எதிர்க்க யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த சிங்கம், அச்சமின்றி நேராக நீருக்குள் குதித்து, தன்னம்பிக்கையுடன் முதலையுடன் தாக்குதல் நடத்துகிறது. கடும் முறையில் சண்டை தொடங்கியதும், இருவரும் தங்களது வலிமையை முழுமையாக பயன்படுத்துகிறார்கள். சிங்கத்தின் நோக்கம் ஒன்று மட்டும் தான், இறையை கைப்பற்றுவது. இறுதியில், பல நிமிடங்கள் நீண்ட இந்த உயிரின் போர் முடிவில், சிங்கம் தன்னுடைய வலிமையால் வெற்றி பெற்று இறையை பிடித்து வெளியேறும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @thebigcatsempire என்ற பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதனை தற்போது வரை இலட்சக்கணக்கானோர் பார்த்து, தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். ஒருவர், “நான் என் அண்ணனுடன் பீட்சாவிற்காக இப்படித்தான் சண்டை போடுவேன்!” என நகைச்சுவையாகக் கூறியிருப்பார். மற்றொருவர், “இது தான் சிங்கம் காடின் அரசன் என்பதற்கான சான்று!” எனக் குறிப்பிட்டுள்ளார். உண்மையில், உயிர் வாழ்வதற்கான போராட்டத்தில், மிருகங்களுக்கிடையிலுள்ள இந்தக் கடுமையான மோதல், இயற்கையின் கொடூரமான உண்மையை நம்மிடம் எடுத்துக் கூறுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.