நகரி, செப்டம்பர் 10 : ஆந்திர பிரதேசத்தில் (Andhra Pradesh) தேர்வு எழுத விடாததால் ஆத்திரமடைந்த எம்டெக் மாணவர் ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவருக்கு வருகை பதிவு மிகவும் குறைவாக இருந்ததன் காரணமாக அவரை தேர்வு எழுத ஆசிரியர் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக தாக்கியது தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வருகை பதிவு குறைவாக இருந்ததால் தேர்வு எழுத அனுமதிக்காத ஆசிரியர்ஆந்திர மாநிலம், விஜயநகர் பகுதியை சேர்ந்தவர் விநாயக புருசோத்தமன். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் எம்டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால், அவர் முறையாக கல்லூரிக்கு செல்வதில்லை. இந்த நிலையில், சம்பவத்தன்று கல்லூரிக்கு தேர்வு எழுத மாணவர் சென்றுள்ளார். அப்போது அந்த தேர்வு அறையில், கோபால்ராஜ் என்ற பேராசிரியர் தேர்வறை மேற்பார்வையாளராக இருந்துள்ளார். இந்த நிலையில், புருசோத்தமனுக்கு வருகை பதிவு மிகவும் குறைவாக இருந்ததன் காரணமாக அவர், மாணவரை தேர்வு எழுத அனுமதி மறுத்துள்ளார்.
இதையும் படிங்க : துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்ட 5 வயது சிறுவன்.. பரிதாப பலி.. சோக சம்பவம்!
ஆசிரியரை சரமாரியாக கத்தியால் குத்திய மாணவர்இந்த நிலையில், தேர்வு எழுத வேண்டும் என்றால் துறை தலைவரை சந்தித்து அனுமதி பெற்றுக்கொண்டு வரவேண்டும் என்றும் ஆசிரியர் மாணவரிடம் கூறியுள்ளார். ஆனால், ஆவற்றை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத அந்த மாணவர் தேர்வு எழுதுவதிலேயே குறியாக இருந்துள்ளார். ஆனால், ஆசிரியர் பிடிவாதமாக இருந்துள்ளார். அதுமட்டுமன்றி, காவலாளியை அழைத்து மாணவரை வெளியேற்றும்படியும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : என்னுடன் பேச மாட்டியா?.. பெண்ணை உயிருடன் எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!
பலத்த காயமடைந்த ஆசிரியருக்கு தீவிர சிகிச்சைஇதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆசிரியரை மீட்டு சக ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவரை கையும், களவுமாக பிடித்து வைத்திருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த மாணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் கத்தியால் குத்தியதால் பலத்த காயமடைந்த அந்த ஆசிரியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.