சமூக வலைதளங்களில் தினமும் ஏதேனும் வீடியோக்கள் வைரலாகும் நிலையில், சமீபத்தில் ஒரு பெண்ணின் நடன வீடியோ இணையத்தில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இந்தி பாடலுக்கு நடனமாடிய இந்த பெண், நிகழ்ச்சியில் மேடையில் இருந்த மற்ற பெண்களை எல்லாம் முந்தி, பார்வையாளர்களின் கவனத்தை ஒரேநேரத்தில் ஈர்த்துள்ளார். நடன பாவனைகள், சுறுசுறுப்பான அசைவுகள் மற்றும் அசத்தல் எக்ஸ்பிரஷன்களுடன், அந்த பெண் ஒரு ப்ரொஃபஷனல் டான்சரை போல ஆடினார்.
View this post on Instagram
A post shared by Sangita Mishra (@sangeeta_mishra05)
இந்த நடன வீடியோ இன்ஸ்டாகிராம் பிளாட்ஃபாரத்தில் `sangeeta_mishra05` என்ற ஐடியிலிருந்து பகிரப்பட்டு, தற்போது வரை 2.6 கோடி பார்வைகள் மற்றும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. “இது தான் உண்மையான டாலன்ட்”, “இந்த பெண் ப்ரொஃபஷனல்களையும் தாண்டிட்டாங்க”, “இப்போ ரியாலிட்டி ஷோவுக்கு போகணும்” என பலரும் தங்கள் பாராட்டுகளை கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ கடும் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், பலரும் இதைப் பார்த்து சிரிப்பும் ஆச்சரியமும் அடைந்து பகிர்ந்து வருகின்றனர்.