Nanjil Vijayan: பிரபல விஜய் டிவி நடிகர் நாஞ்சில் விஜயன் தன் மீது திடீரென கொடுக்கப்பட்டு இருக்கும் புகாரை அடுத்து மனைவிக்கு ஆறுதல் சொல்ல போட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே செலிபிரிட்டிகளின் இரண்டு கல்யாண பிரச்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டாவுடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஜாய் கிறிஸில்டா ஏழு மாதம் கர்ப்பமாகவும் இருக்கிறார். இரண்டு வருடம் வாழ்ந்தவர் திடீரென அவரிடம் இருந்து பிரிந்து தற்போது தன் மனைவியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கமிஷனர் அலுவலகத்தில் சென்று புகார் அளித்து இருக்கிறார். 10 நாட்கள் கடந்தும் மாதம்பட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் விஜய் டிவியின் இன்னொரு பிரபலமான நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை வைஷு என்பவர் திடீரென கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். பல வருடமாக என்னுடன் பழக்கத்தில் இருந்த விஜயன் திடீரென தன்னை தவிர்ப்பதாக அவர் மனு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருநங்கை வைஷுவும் தொடர்ந்து பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நாஞ்சில் விஜயன் தன் மீதான பிரச்னைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன் மனைவி மரியாவிற்கு, ஓய் பொண்டாட்டி எனக்கு நீ தான், உனக்கு நான் தான் என மாதம்பட்டி ஸ்டைல் வீடியோவை போட்டு இருக்கிறார்.
கடைசியில் காமெடிக்கும் அவர் செய்திருக்கும் விஷயமும் ரசிகர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே விஜய் டிவியின் முக்கிய நடிகர்களான குரோஷி, உமைர் என எல்லாரும் மாதம்பட்டியின் இரண்டாம் மனைவி ஜாய் கிறிஸில்டா வெளியிட்ட வீடியோவை நக்கலடிக்கும் விதமாக காமெடி வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
ஒரு பெரிய பிரச்னையை நீர்த்து போக செய்யும் விதமாக மாதம்பட்டி தரப்புக்கு சப்போர்ட்டாக வீடியோ வெளியிடுவது போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாஞ்சில் விஜயன் பிரச்னையும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
வீடியோவைக் காண: View this post on Instagram