சபரீசனின் தந்தை வேதமூர்த்தி காலமானார். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஸ்டாலின்-துர்கா தம்பதியின் மகள் பெயர் செந்தாமரை. இவரது கணவர் சபரீசன். இவர் தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு உறவினர் ஆவார்.
ஸ்டாலின் மகள் செந்தாமரை தனது கணவர் சபரீசனுடன் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (80) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஒஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் காலமானார். வேதமூர்த்தியின் உடல் கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வேதமூர்த்தி முதல்வர் ஸ்டாலினின் சம்மந்தி என்பது குறிப்பிடத்தக்கது