நாசாவில் பணிபுரிய சீனர்களுக்கு தடை, விண்வெளி திட்டங்களை அணுக கடும் கட்டுப்பாடுகள்.!
Dinamaalai September 12, 2025 06:48 AM


அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில், நாசா இப்போது சீன குடிமக்கள் அதன் விண்வெளி திட்டங்களில் பணிபுரிய தடை விதித்துள்ளது. நாசா மையத்திற்கு சீனர்கள் வரவும், விண்வெளித் திட்டங்கள் தொடர்பான தரவுகளை அணுகவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  


நாசா  சமீபத்தில் சீன குடிமக்களுக்கு, அமெரிக்க விசாவுடன் இருந்தாலும், அதன் விண்வெளி திட்டங்களில் பங்கேற்க தடை விதித்துள்ளது.  முன்னதாக, சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள்  பலர், நாசாவின் சில திட்டங்களில் பணிபுரிந்து  வந்தனர்.  

செப்டம்பர் 5ம் தேதி முதல், சீன குடிமக்கள் நாசாவின் தரவு அமைப்புகளுக்கும், நேரடி மற்றும் மெய்நிகர் கூட்டங்களுக்கும் அணுகல் மறுக்கப்பட்டுள்ளது.விண்வெளி நிறுவனத்தின் உள் பாதுகாப்பு மற்றும்  ஆராய்ச்சிப் பணிகளின் உணர்திறன் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.