வேலூர்: வேலூரின் காட்பாடி காந்திநகரில் தி.மு.க. பொதுச்செயலாளரும், மாநில அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தமிழர் சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஐனாதிபதி ஆனது குறித்து கேட்டபோது, “தமிழர் என்பது மட்டும் அல்ல, அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்து கேட்டபோது, “அ.தி.மு.க. நிலை குறித்து நான் என்ன சொல்வது? அது அவர்கள் கட்சி. அந்தக் கட்சி விவகாரத்தில் தலையிட நான் தயாரில்லை” எனப் பதிலளித்தார்.
தாமிரபரணி ஆற்றை தி.மு.க. தலைமுழுகி விட்டதாக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதற்கு அவர், “நயினார் பாவம். புது பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறார். அவர் சட்டசபையில் எப்படி செயல்படுகிறார் என்பது எங்களுக்கு தெரியும்” என்று விமர்சித்தார்.
த.வெ.க. தலைவர் நடிகர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்து கேட்டபோது, “நடிகர் விஜய் முதலில் வெளியே வரட்டும், பார்க்கலாம். அவர் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை வைத்தாலும் என்ன? வெள்ளிக்கிழமை வைத்தாலும் நமக்கென்ன?” எனச் சாடினார்.இவ்வாறு துரைமுருகன் பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்தார்.