ஏர்போர்ட் மூர்த்தி மீது புகார்.. எஸ்பி யிடம் போயர் நலசங்கத்தினர் மனு!
Seithipunal Tamil September 12, 2025 04:48 AM

போயர் சமுதாய மக்களை இழிவாக பேசிய ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிதேனி மாவட்ட போயர் நலசங்கத்தினர்,மாவட்ட எஸ்பி யிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஏர்ப்போர்ட் மூர்த்தி என்பவர் போயர் சமூக மக்களை இழிவாக குறிப்பிட்டு பேசும் காணொளி வைரலாகி வருகிறது.இது தமிழகம் முழுவதும் போயர் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் போயர் சமூக மக்களை இழிவாக பேசிய ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்ட போயர் நலச் சங்க மாவட்ட தலைவர் பாண்டி, வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையிலான நிர்வாகிகள் தேனி மாவட்ட எஸ்பி அலுவலகம் வந்தனர்.

அங்கு, தேனி மாவட்ட எஸ்பி., புக்யா ஸ்நேக  பிரியாவிடம் இது குறித்த கோரிக்கை மனுவை அளித்தனர்.பின் செய்தியாளர்களிடம் பேசிய போயர் நலச்சங்க நிர்வாகி பிரபாகரன்,தமிழ்நாட்டில் புரட்சி தமிழகம் கட்சியை சேர்ந்த ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் சமூக வலைத்தளத்தில் போயர் சமுதாயத்தை இழிவாக பேசியுள்ளார். அவர் பேசி வார்த்தையினால் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த போயர் இன மக்களும், மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே இதுகுறித்து ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் அதே சமூக வலைத்தளத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு, ஏர்போர்ட் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போயர் இன மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்,"என தெரிவித்தார்
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.