03 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதன்படி, தற்போது பாட்னா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் பவன்குமார் பஜன்திரியை அதே நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கோல்கட்டாஉயர்நீதிமன்ற நீதிபதி சவுமியா சென்-ஐ, மேகாலயா யுயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். சுந்தரை, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.