நடிகர் கமல்ஹாசனின் மகளும் முன்னணி நடிகையுமான 'சுருதிஹாசன்', தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகிலும் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில், வெளியான 'கூலி' படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் தனது தனித்துவமாக நடிப்பை காட்சிப்படுத்தினார்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுருதிஹாசன், தன் அனுபவங்களை பகிர்ந்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, “எல்லோரும் போல, நானும் செல்போன் அதிகம் பயன்படுத்துகிறேன். வேலைகளுடன் இணைந்திருப்பதால், அடிக்கடி அதோடு நேரத்தை கழிக்கிறேன்.
சில நேரங்களில் சிக்னல் இல்லாமல் போவது வெறுப்பாக இருக்கும். ஆனால் அதே சில நேரங்களில் அதுவே மகிழ்ச்சியாக கூட இருக்கிறது” என்று தெரிவித்தார்.இது தற்போது ரசிகர்களால் மிகவும் பகிரப்படும் விஷயமாக மாறியுள்ளது.