தமிழ்நாடு முழுவதும் போத்தீஸ் ஜவுளி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு நடைபெறுகிறது. அதன்படி சென்னை, நெல்லை டவுன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அபிராமபுரத்தில் உள்ள போத்தீஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. மேலும் சென்னை நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள போத்தீஸ் உரிமையாளரின் இரு மகன்கள் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. மேலும் போத்தீஸ் நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.