Benz Movie : லோகேஷ் கனகராஜின் LCUவில் இணைந்த வாத்தி பட நடிகை.. வைரலாகும் போஸ்டர்!
TV9 Tamil News September 12, 2025 08:48 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் வெளியான இப்படமானது, இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. மேலும் இவர் LCU என்ற பட தொகுப்பையும் உருவாக்கிவருகிறார். இந்த LCU பட தொகுப்பின் கீழ் இதுவரை, கைதி, விக்ரம் மற்றும் லியோ (Leo) என 3 படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை அடுத்ததாக 4வது உருவாகிவரும் திரைப்படம்தான் பென்ஸ் (Benz). இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் நிலையில், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (Bakkiyaraj kannan) இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முதல் பாதி நிறுவடைந்ததாக கூறப்படுகிறது. இதில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) மற்றும் நிவின் பாலி (Nivin Pauly) இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தை ஷூட்டிங் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், தற்போது இப்படத்திலிருந்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனன் (Samyuktha Menon) இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :நான் காதல் படங்களில் நடித்தால் அது இப்படி மட்டும் தான் இருக்கும் – நடிகர் அர்ஜுன் தாஸ் சொன்ன விசயம்!

நடிகை சம்யுக்தா இணைந்தது குறித்து பென்ஸ் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு:

What better day to welcome @iamsamyuktha_ on board to the #Benz family than on her birthday! ♥️

Wishing you a very happy birthday and sending all our love and best wishes on your special day 🤗#HBDSamyuktha @offl_Lawrence @nivinofficial @Dir_Lokesh @PassionStudios_… pic.twitter.com/PzrA9WFDYe

— GSquad (@GSquadOffl)

LCU-வில் இணைந்த நடிகை சம்யுக்தா மேனன் :

இந்த பென்ஸ் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், இதில் வில்லன் வேடத்தில் நடிகர் நிவின் பாலி நடித்துவருகிறார் . இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜ் தயாரித்து வருகிறார். இந்த படமானது லோகேஷ் கனகராஜின் LCU படதொகுப்பில் 4வது திரைப்படமாக உருவாகிவருகிறது.

இதையும் படிங்க : மார்ஷல் படத்தில் கார்த்திக்கு வில்லனாகும் பிரபல நடிகர்.. அட இவரா?

இந்நிலையில், இந்த படத்தில் நடிகை சம்யுக்தா மேனனும் இணைந்துள்ளார். நேற்று 2025 செப்டம்பர் 11ம் தேதியில், சம்யுக்தா மேனனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பென்ஸ் படத்தின் ரிலீஸ் எப்போது :

பென்ஸ் படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கியிருந்தடித்து. இப்படத்தின் ஷூட்டிங் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றே கூறலாம். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

இதுதான் இவர் இசாயமைப்பாளராக அறிமுகமான முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தத்க்கது. இந்த பென்ஸ் படத்தின் ஷூட்டிங் ஓரளவு நிறைவடைந்த நிலையில், வரம் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.