லூசியானா மாநிலத்தின் ராபர்ட் பவுல்வர்டுவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பணியாற்றிய முன்னாள் துப்புரவுப் பணியாளர் ஒருவர், அந்த இல்லத்தில் வசித்து வந்த வயதான பெண் ஒருவரை பாலியல் முறையில் துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, 99 ஆண்டு சிறைதண்டனைக்கு உள்ளாகவிருக்கிறார்.
இந்தச் சம்பவம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றதாக ஸ்லிடெல் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் 47 வயதான பாபி பெஸ்டர் என்பவர்.
புகாரின் அடிப்படையில், பெஸ்டர், 69 வயதான முதிய பெண் ஒருவர் தனது அறையில் படுக்கையில் இருக்கும்போது, அனுமதியின்றி அறைக்குள் நுழைந்துள்ளார். பின்னர், அவரது கால்களில் இருந்து விழுந்த சாக்ஸை அணிவிக்க முனைந்தார். இதைத் தொடர்ந்து, அவர் பெண்ணின் கால்களில் லோஷன் தடவி, அவரது பிறப்புறுப்பை காலால் அழுத்தியுள்ளார்.
அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்த போதும், பெஸ்டர் பல வருடங்கள் பிடிபடாமல் இருந்து வந்தார். இதற்கிடையில் அவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, பெஸ்டர், தனது “கால் தொடர்பான” ஆசையை ஒப்புக்கொண்டாலும், தன்மீது சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
மேலும், அரசு வழக்கறிஞர்கள் சாட்சியளிக்க வைத்த மற்றொரு பெண், பெஸ்டர் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் தன்னை மனஅழுத்தம் தரும் வகையில் தொடர்பு கொண்டதாகக் கூறினார். “உன் பாதங்களில் சுயஇன்பம் செய்யலாமா?”என்ற கருத்துகளை அவர் பதிவுசெய்ததாக சாட்சியம் அளிக்கப்பட்டது.
அந்தப் பெண்ணும், தன்னை தொடர்ந்து வருவதை கண்டு பயந்ததாகவும், அதையடுத்து போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார். பாபி பெஸ்டருக்கு எதிராக, பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கான தண்டனை 2025 அக்டோபர் 23ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. மேலும் அவருக்கு அதிகபட்சமாக 99 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.