பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். அவர் ராகினி எம்.எம்.எஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். கரிஷ்மா சர்மா மும்பை சர்ச்கேட்டில் நடக்க இருந்த படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்டார்.
இதற்காக அவர் புறநகர் ரயிலில் ஏறிச் செல்ல முடிவு செய்தார். அவருடன் அவரது தோழிகளும் இருந்தனர். அவர்கள் ரயில் நிலையத்தில் நின்றபோது சர்ச்கேட் செல்லும் ரயில் வந்தது. உடனே கரிஷ்மா சர்மா ரயிலில் முதல் ஆளாக ஏறிவிட்டார்.
சில நொடிகள் மட்டுமே நிற்கும் புறநகர் ரயில் உடனே கிளம்பியது. ஆனால் ரயிலில் கரிஷ்மா சர்மாவின் தோழிகள் ஏறவில்லை. ரயில் கிளம்பிய பிறகுதான் கரிஷ்மா சர்மா தனது தோழிகள் ரயிலில் ஏறவில்லை என்பதை கவனித்தார்.
உடனே அவர் சுதாரித்துக்கொண்டு ரயிலில் இருந்து கீழே குதித்தார். இதனால் அவர் ரயிலில் இருந்து பின்புறமாக கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டது. கரிஷ்மாவை அவரது தோழிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் இப்போது சிகிச்சை எடுத்து வருகிறார்.
இது தொடர்பாக கரிஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதோடு மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இரண்டு நாட்களாக கடுமையான வலி இருப்பதாகவும், தலை மற்றும் முதுகு பகுதியில் காயம் மற்றும் வீக்கம் ஏற்பட்டு இருப்பதாகக் கரிஷ்மா தெரிவித்துள்ளார். அவருக்கு டாக்டர்கள் சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்துள்ளனர். கரிஷ்மாவின் தோழிகளும் நடந்த சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
கரிஷ்மா சர்மா ரியாலிட்டி ஷோக்களில் அதிக அளவில் பங்கேற்று வருகிறார்.
``எனது முதல் வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றி இருக்கிறேன்; முதல் ஆசிரியர் இவர்தான்'' - ராகவா லாரன்ஸ்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR