செம ட்ரீட் வெயிட்டிங்.. வீக்எண்டில் வெளியாகும் தரமான படங்கள்.. ஹைப் ஏத்தும் பிளாக் மெயில்..
CineReporters Tamil September 12, 2025 01:48 PM

தமிழ் சினிமாவில் வாரம் வாரம் புது புது படங்கள் இதுவரை கண்டிராத கதைக்களங்களை கொண்டு வெளியாகிறது. அந்த வகையில் செப்டம்பர் 12 அதாவது நாளை சுமார் 10 படங்கள் வெளியாக இருக்கிறது. என்னென்ன படங்கள் என்று வரிசையாக பார்க்கலாம்.

பிளாக்மெயில் :
இயக்குனர் மாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள திரைப்படம் பிளாக் மெயில். இதுவரை காணாத திரில்லர் கதையில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வரும் ஜீவி இந்த படத்தில் திரில்லரில் ரசிகர்களை கட்டி போட தயாராக இருக்கிறார். குடும்பத்துடன் கண்டுபிடிக்க சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக பிளாக்மெயில் இருக்கும் என்று பட குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பாம் :
அர்ஜுன் தாஸ் நடிப்பில் பாம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. கருத்து வேறுபாடு கொண்ட இரு நண்பர்களின் கதை தான் இது. காமெடி கலந்து எமோஷனல் ட்ராமாவாக இயக்குனர் விஷால் வெங்கட் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். இந்த வீக்எண்டிற்க்கு ஏத்த தரமான படம்தான் இந்த பாம்.

குமாரசம்பவம் :
சின்னத்திரை சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாநாயகன் குமரன் தங்கபாண்டியன் வெள்ளித் திரையில் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் குமார சம்பவம். சினிமா எடுப்பதற்கு துடிக்கும் ஹீரோ என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் கடைசியில் படம் எடுத்தாரா? இல்லையா? என்பதை சுவாரஸ்யம் குறையாமல் காமெடி கலந்து இந்த படம் உருவாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் மாறுபட்ட கோணத்தில் இந்த படம் இருக்கும் என்று படக் குழு தெரிவித்துள்ளது.

தணல் :
அதர்வா நடிக்கும் தணல் திரைப்படம் அறிமுகம் இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ளார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டிஎன்ஏ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படம் வெளியாக இருக்கிறது. திரில்லர் மற்றும் ஆக்சன் கலந்து இந்த படம் உருவாகி இருக்கிறது. தணல் குடும்பத்துடன் சென்று பார்க்க தரமான படம்.

காயல் :
திருமணமான இளம் பெண் தன் வாழ்க்கையில் நடக்கும் கொடுமைகளையும் அவள் இறந்த பின்பு அந்த துக்கத்தை அந்த குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது. அதனால் ஏற்படும் விளைவுகளை உணர்ச்சிபூர்வமாக காயல் படம் எடுத்துக் கூறுகிறது. சென்டிமென்ட் நிறைந்த இந்த படத்தை குடும்பத்தோடு கண்டு களிக்கலாம்.

அந்த ஏழு நாட்கள் :
புது முகங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் அந்த ஏழு நாட்கள். தமிழ் சினிமாவின் இதுவரை காணாத ரொமான்டிக் த்ரில்லர் அனுபவத்தை இந்த படம் கொடுக்கும். இந்த படத்தில் பாக்கியராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே வெளியான இதன் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

யோலோ :
புது முகங்கள் தேவ் மற்றும் தேவிகா நடிப்பில் ரொமான்டிக் காமெடி திரைப்படமாக யோலோ உருவாகி இருக்கிறது. இந்தத் திரைப்படம் கலகலப்பான கமர்சியல் என்டர்டைன்மெண்டாக உருவாகி இருக்கிறது. சிறந்த சினிமா அனுபவத்தை பெற இந்த திரைப்படத்தை தாராளமாக கண்டு களிக்கலாம்.

மிராய் :
அனுமன் ஹீரோ தேஜா நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் மிராய். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அனுமன் திரைப்படம் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படமும் அதே போல் வசூல் செய்ய வேண்டும் என்பது ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

தாவூத் :
ராதாரவி, ராம், சாரா போன்ற நடிப்பில் தாவூத் திரைப்படம் நாளை வெளியாகியிருக்கிறது. இது ஒரு கேங்ஸ்டர் படம். ஆனால் வழக்கமான சண்டைக் காட்சிகளுக்கு பதிலாக வித்தியாசமான கதைகளை கொண்டிருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. சண்டையில்லாத வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படத்தை பார்க்க இந்த படம் அருமையான சாய்ஸாக இருக்கும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.